இறந்துவிட்டாரா கிம்? – வடகொரியாவில் தயார்படுத்தப்படும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு!

கிம் ஜாங் தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில், பொதுவாக ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காக தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் தலைநகர் Pyongyang-ல் உருவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்றும், அதுவும் எதிர்வரும் வாரங்களில் என நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதியில் இருந்தே பொதுவெளியில் தென்படாத வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன், அந்த பிராந்தியத்தில் இருந்து வெளியாகும் தகவலின்படி, இதய அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் மரணமடைந்துள்ளார் என்பதே. மேலும், தற்போது தயார்ப்படுத்தப்படும் ராணுவ அணிவகுப்பானது வடகொரிய தலைவருக்கானதாக இருக்கலாம் எனவும், காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் மாரடைப்பால் மரணமடைந்த போதும் இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைநகர் Pyongyang-ல் அமைந்துள்ள மிரிம் ராணுவ அணிவகுப்பு பயிற்சி மைதானம் அருகாமையிலேயே தற்போது தற்காலிகமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தலைநகரில் ராணுவ அணிவக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் கொரோனா பரவல் காரணமாக அதை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான அவரது உணவு முறையே, தற்போது மரணமடைந்தார் என்ற ஊகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. அமெரிக்கா, சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொதுவாக இல்லை.

இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் கோமாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில், ஏவுகணை சோதனையின் போது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னொன்று கடற்கரையில் நடக்க சென்ற கிம் ஜாங் மாரடைப்பால் குப்புற சரிந்தார் எனவும், அவரை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ளது. இருப்பினும் அண்டை நாடான தென் கொரியா, கிம் ஜாங் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் உள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த திடீர் ராணுவ அணிவகுப்பு தயாரிப்புகள் ஏன் என்ற மர்மம் எதிர்வரும் நாட்களில் விலகும் என நம்பப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!