100-கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய இளைஞன் – கைவிட்ட பெற்றோர்!

தமிழகத்தில், பெண்களின் வாழ்க்கையில் விளையாடி அடுக்கடுக்கான புகார்களில் சிக்கிய இளைஞனை பெற்றோர் அவன் எங்கள் மகன் இல்லை என்று கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவருடன் நெருங்கி பழகிய காசி என்ற சுஜி பல லட்சம் பணத்தை பறித்து விட்டு ஏமாற்றியுள்ளான். இந்நிலையில், அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் அவனை கைது செய்து விசாரித்ததில், 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையில் காசி விளையாடியது தெரியவந்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் புகார் அளிக்க முன்வராததால் பொலிசார் அதற்கு என்று தொடர்பு எண்ணையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் காசியின் நண்பர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுஜியின் பெற்றோர், பொலிஸாரிடம் `எங்களுக்கும் அவனுக்கும் இனிமேல் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, காசியின் லேப்டாப்பைத் தேடி அவரின் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

அந்த லேப்டாப், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், சைபர் கிரைம் பொலிசாரின் உதவியுடன் காசியின் லேப்டாப்பை ஓப்பன் செய்ய முடிவு செய்துள்ளனர். காசியின் லேப்டாப்பில் உள்ள ரகசியம் வெளியானால் நிச்சயம் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காசி சமூகவலைதள பக்கத்தில் 10க்கும் மேற்பட்ட கணக்குகளை துவங்கி அதன் மூலம் பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!