அரியாலையை சேர்ந்த ஐவருக்கு மீண்டும் தொற்று!

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை முடிந்து திரும்பிய அரியாலையைச் சேர்ந்த ஐந்து பேருக்கு, சிறியளவிலான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று 27 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா மருத்துவமனை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. யாழ். மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 6 பேருக்கும், சோதனை நடத்தப்பட்டது.

அரியாலைப் பகுதியை சேர்ந்த இவர்கள் அனைவரும், கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்தனர்.

நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இவர்களில் ஐந்து பேருக்கு, வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே, இவர்கள் ஐந்து பேரும் தொடர்ந்தும் இரண்டு வாரங்கள், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறியதந்துள்ளனர். மற்றவருக்கும், மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!