பரக் ஒபாமாவை மக்கள் மத்தியில் கேவலப்படுத்திய ட்ரம்ப்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார் என தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பில் டிரம்ப் அரசை கடுமையாக முன்னாள் அதிபரான பராக் ஒபாமா அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒபாமா தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து டிரம்ப், “ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அவர் முற்றிலும் திறமையற்றவர்” என்று தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

“சில விதிவிலக்குகளை தவிர அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது. இது உண்மையான நல்ல விசயம்தான்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!