கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 10-வது இடம்!

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளதுடன், ஜூன் முதலாம் திகதி முதல் ரயில் சேவையும் தொடங்கவுள்ளது.

இந்த சூழ்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 139,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4024 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,745 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானை பின்னுக்குத் தள்ளி, முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. அதற்கமைய கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 10ஆவது இடத்தில் உள்ளது. மேலும் அமெரிக்கா முதலாவது இடத்திலும் தொடர்ச்சியாக பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின, பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி போன்ற நாடுகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!