கோடீஸ்வரர் ஆக 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை…

பதுக்கோட்டையில் காட்டுப்பகுதிக்கு தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அவரது தந்தையே நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் 3வது மகள் வித்யா.

கடந்த மாதம் 18ஆம் தேதி அங்குள்ள தைலமரக் காட்டுக்குள் ஊற்று நீர் எடுக்கச் சென்ற சிறுமி வித்யா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகித்த நிலையில், பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து வேறொரு கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

பன்னீர் செல்வதுக்கு இரண்டு மனைவிகள், பல பெண்களுடன் தொடர்பும் இருந்ததால் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கையுடைய பன்னீர்செல்வம் 2வது மனைவியான மூக்காயியுடன் புதுக்கோட்டையை இருந்த பெண் மந்திரவாதியான வசந்தியை சென்று சந்திதுள்ளார்.

அவரும் முதல் மனைவியின் பெண் குழந்தையை நரபலி கொடுத்தால் அதீத சக்தி கிடைக்கும் என்றும், கோடீஸ்வரர் ஆகலாம் எனவும் குறி சொல்லியுள்ளார்.

எனவே 17ஆம் திகதி இரவு மந்திரவாதி வசந்தியை நொடியூருக்கு வரவழைத்து, தைலமர காட்டுப்பகுதிக்குள் இரவு நேரத்தில் பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

18ஆம் தேதி பொழுது விடிந்ததும் காலை 7 மணி அளவில் தனது முதல் மனைவியின் 3ஆவது மகளான 13 வயது சிறுமியை குளத்தில் தண்ணீர் எடுத்துவர கூறியுள்ளார்.

மகள் குடத்துடன் சென்றதும் பின் தொடர்ந்து சென்ற பன்னீர், சிறுமியை தனியாக பேச வேண்டும் என்று தைலமரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே முதல்நாள் இரவில் பூஜை செய்த இடத்தில் சிறுமியை அமரவைத்து துண்டால் கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.

இது பாலியல் ரீதியாக நடந்தது போன்று இருக்க வேண்டும் என்பதால் சிறுமியின் ஆடைகளை களைந்துவிட்டு வந்துள்ளார்.

ஊருக்குள் வந்து தன் மகளை காணவில்லை என நாடகமாடியதுடன் தேடித்திரிவது போன்றும் நடித்துள்ளார்.

எனினும் பிரேத பரிசோதனையில் கழுத்தை இறுக்கியதாலேயே சிறுமி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பன்னீர்செல்வம், பெண் மந்திரவாதி, உறவினர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!