அமெரிக்காவில் கொலைசெய்யப்பட்ட கருப்பினத்தவர் கொரோனாவால் பாதிக்கபட்டவராம். மருத்துவ பரிசோதனை.

அமெரிக்காவில் பொலிஸாரினால் கொலைசெய்யப்பட்ட கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் திங்கட்கிழமை 20 பக்கம் கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தாரின் அனுமதியுடன் வெளியிட்டது.

அந்த அறிக்கையில் அவர் பொலிஸாரினால் தாக்குதலினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அது ஒரு கொலை எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்படுவதற்கு முன் ஜோர்ஜ் புளொய்ட் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹென்னபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கும் அவரது மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!