கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னேறி வரும் இந்தியா!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,26,770 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 6,348 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டு இருந்த தகவலில் தெரிவித்து இருந்தது. இந்தியாவில் நேற்று 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளன. மொத்த இறப்பு எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்து உள்ளது. மீட்பு வீதம் அல்லது மக்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் 48.27 சதவீதம் ஆகும் என கூறி உள்ளது.

கடைசி 15 நாள்களில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 9,304 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் நள்ளிரவில் இந்தியாவில் 2,35,769 ஆகவும், இத்தாலி 2,34,531 ஆகவும் காட்டியது. இதனால் இந்தியா இத்தாலியை முந்தி 6 வது இடத்திற்கு சென்றது. 6,641 இறப்புகளுடன், இந்தியா இப்போது மிக மோசமான பாதிப்புக்குள்ளான 12 வது நாடாக உள்ளது.

உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 12- வது இடம். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா , ரஷ்யா, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.12 லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ள போதிலும், இந்தியாவில் இன்னும் 1 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் சிகிச்சையில் உள்ளன. இப்போது பல நாட்களாக 9,000 அல்லது அதற்கு மேற்பட்டவையாக அதிகரித்து வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!