இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவக்கூடும் – அனில் ஜாசிங்க எச்சரிக்கை

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுள்ளக்கட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், கொரோனா வைரஸ் மீண்டும் சமூகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து பேருந்துகளின் சுகாதார விதிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று பல்வேறு தரப்பினர்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சமூக இடைவெளி குறித்த சட்டத்தை மீறுவதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற சட்டங்களை மீறும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!