இலங்கையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் 5000 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நிலையத்தில்…

இலங்கையில் கொரோனா சந்தேகத்தின் பேரில் 5000 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி கூறினார்.

இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1800 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 409 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

இலங்கை கடற்படையை சேர்ந்த 836 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 551 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!