டெல்லி முதல்வருக்கு கொரோனா அறிகுறி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் என கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தலைநகரம் கொரோனா அதிகரிப்பை எதித்து போராடுகையில் இந்த செய்தி வந்துள்ளது. இதுவரை டெல்லியில் 27,000 க்கும் மேற்பட்ட வழக்குகளும் 761 இறப்புகளும் பதிவாகியுள்ளது.

நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்க சிரமப்படுகிறார்கள் என்ற தகவல்களுக்கு மத்தியில் நகரத்தில் மருத்துவமனை படுக்கைகள் மாநில மக்களுக்காக ஒதுக்கப்படும் என்று கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதற்கிடையில், இந்தியா தனது கடுமையான ஊரடங்கை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், கோயில்கள் மற்றும் அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாவது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் டெல்லி ஆகும், இந்தியா ஒட்டுமொத்தமாக 2,56,611 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!