13 பேரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு!

இணுவில், ஏழாலை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேரிடம், இருந்து பெறப்பட்ட மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமையவே, 13 பேரின் மாதிரிகளும் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணுவிலில் தங்கியிருந்த பின்னர், இந்தியா திரும்பிய புடவை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இணுவில் மற்றும் ஏழாலையில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளே மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!