ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறை

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.

இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். இதன்படியே இவருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 1500 ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தமாக 3000 ரூபா அபராதத்தை தலா ஆறு மாத காலம் வழங்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் எக்னெலிகொடவின் மனைவிக்கு 50000 ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!