கோத்தா ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும்! – நவீன் சவால்

கோத்தாபய ராஜபக்‌ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்திருந்தால் அதனை பொது மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தாபய ராஜபக்‌ஷ தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டிருப்பதாக உதய கம்மன்பில கூறியிருந்தார். அவ்வாறு குடியுரிமையை இரத்துச் செய்திருந்தால் அதற்காக வழங்கப்பட்டிருக்கும் சான்றிதழை கோத்தாபய மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அப்படி அமெரிக்க பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டால் அதனை உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்து நீதிமன்றத்தின் அனுமதி பெறவேண்டும். இப்படியான சட்ட அமைப்பு இருக்கும் நிலையில் உதய கம்மன்பில கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் கருத்து.

அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்துச் செய்வதற்கான கோரிக்கையை கோத்தாபய ராஜபக்‌ஷ முன்வைத்திருப்பதாகவே நாம் அறிந்துள்ளோம். எனினும், பிரஜாவுரிமை இன்னமும் இரத்துச் செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் உதய கம்மன்பில கூறும் சட்ட விளக்கம் ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!