நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை!

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது என்று கபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர், கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்தலை நடத்துவதை விட, வாக்குப் பெட்டிகளைக் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து நிரப்பியனுப்புமாறு கூறுவது நல்லது. அரசாங்கத்தின் பின்னால் இருந்து கொண்டு ஆதரவு வழங்கும், குழுக்களுக்கு, சுகாதாரப் பிரிவினரின் அளவுகோல்கள், பரிந்துரைகள், வழிகாட்டுதல்கள், வாய்ப்பானதாக இருக்கும். தேர்தல் பிரசாரக் கூட்டங்களில பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வரையறைகள், நடைமுறைச் சாத்தியமற்றது, தேர்தல் குறித்த முன் அனுபவமில்லாதவர்களின் கணக்கு என்றும் , கீர்த்தி தென்னகோன் விமர்சித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!