உலக சுகாதார நிறுவனம் 230 மில்லியன் டொலரை தரவில்லை!

உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு 230 மில்லியன் டொலர் வழங்கியதாக கூறப்படும் தகவல்கள் தவறு என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக 230 மில்லியன் டொலரை வழங்கியது என்றும், அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்று அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, உலக சுகாதார நிறுவனம் 230 மில்லியன் டொலரை வழங்கியதாக கூறப்படுவது தவறு என்று கூறியுள்ளார்.

1.9 மில்லியன் டொலரை மட்டுமே இந்த ஆண்டு வழங்குவதாகவும், 2.2 மில்லியன டொலரை அடுத்த ஆண்டு வழங்குவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி தம்மிடம் கூறினார் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!