கோத்தா விவகாரம் அமெரிக்காவின் பிரச்சினை! – என்கிறார் ராஜித

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதா? இல்லையா? என்பது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விடயமே தவிர அது நம் நாட்டுப் பிரச்சினையல்ல என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில், கோத்தாபய 2020 இல் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் உங்களது கருத்து என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘கோத்தாபய அமெரிக்காவின் பிரஜை.எனவே அவர் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டவரே தவிர எமது சட்டதிட்டங்களுக்கானவர் அல்ல. இதனால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதா , இல்லையா? என்பது தொடர்பில் அமெரிக்க அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அத்துடன் அதுல் கேஷாப் எமது நாட்டின் தூதுவர் அல்ல. கோத்தாபய வின் நாட்டுத் தூதுவர். எனவே அது அவர்களுக்குரிய பிரச்சினையே தவிர எமது நாட்டுக்குரிய பிரச்சினையல்ல என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!