வட கொரியா மீதான தடைகள் தொடரும்: அமெரிக்கா

வட கொரியா தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாமல் அந்நாடு மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பே தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புகிரேன். 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பாரியளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று அமெரிக்கா நம்புவதாக மைக் தெரிவித்துள்ளார்

கொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எப்போது மற்றும் எவ்வாறு அணு ஆயுதங்கள் கைவிடப்படும் என்ற எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

“அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அணுஆயுதங்களை கைவிடும் இலக்கை அடைந்து விடலாம்

மேலும், அணு ஆயுத திட்டங்களை தகர்ப்பதை, உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை வட கொரியா புரிந்து கொண்டுள்ளது

உறுதிப்படுத்தப்படும் விவகாரங்கள் குறித்து ஆவணங்களில் ஏன் ஏதும் குறிப்பிடப்பவில்லை என்று ஊடகவியளாலர்களின் கேள்விக்கு பதிலளித்த மைக் பாம்பேயோ, அக்கேள்விகள் “அபத்தமாகவும்”, “அவமதிக்கும் வகையிலும்” இருப்பதாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!