ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி பாராட்டு!

நாளை பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சீன ஜனாதிபதி , ஜீ ஜின்பிங் கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக இலங்கை முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவரான ஹூ வெயி சீன ஜனாதிபதியின் வாழ்த்து கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிடம் நேற்று கையளித்தார்.

அத்தோடு, கொ​ரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கா சீனா அனுப்பிவைத்துள்ள உதவிப் பொருள்கள் தொடர்பான ஆவணமொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இலங்கையும் சீனாவும் ஒரே வகையான நடவடிக்கைகளையே பின்பற்றியதாகவும், நாட்டிப் பாதுகாப்பு படையினரின் உதவியுடனேயே மேற்படி அச்சுறுத்தலை வெற்றிகொள்ள முடிந்ததெனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!