ஹூல் தலைமையில் கண்காணிப்பா?- கொதிக்கிறது மொட்டு.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தலைமையில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்களை தேர்தல் ஆணைக்குழு அனுமமதிக்க வேண்டும். கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பான நடவடிக்கைளை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தலைமையில் முன்னெபடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது.

இரட்டை குடியுரிமையினை கொண்ட ரட்னஜீவன் ஹூல் எவ்வாறு சுயாதீனமான முறையில் செயற்படுவார் என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!