சுகாதார வழிகாட்டு முறை வர்த்தமானி வெளியீட்டில் தொடர்ந்து இழுபறி!

பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. எனினும் இதுவரையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

அத்தோடு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து தாம் சுகாதார அமைச்சுக்கு கவலை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!