தேர்தல் பிரசாரத்துக்காகவே அப்படிக் கூறினாராம் கருணா!

ஆனையிறவு சம்பவங்கள் குறித்து தாம் தேர்தல் பிரசாரத்துக்காகவே கூறியதாக, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று குற்றவியல் விசாரணைப் திணைக்களத்தில் முன்னிலையான கருணா, அங்கு வாக்குமூலம் அளித்து விட்டு 7 மணித்தியாலங்களுக்குப் பின்னர் வெளியே வந்தார். அதன்போது செய்தியாளர்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,

அந்தக் காலத்தில் நடந்த விடங்களை தேர்தல் பிரச்சாரத்துக்காகவே தான் பேசியதாகவும். அதை பூதாகரமாக்குவது அர்த்தமற்றது என்றும் அவர் கூறினார். ‘நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எந்த தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் கூறவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

எனது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அது தவறானது. அந்தக் காலத்தில் நடந்த விடயம் ஒரு உவமைக்காக, தேர்தல் பிரசாரமாகவே கூறப்பட்டது.

இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரம் இது. இதை முறியடித்து வெற்றியடைவோம். இராணுவத்தின் மதிப்பை நான் குறைத்துக் கூறவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!