இலங்கை இரண்டாம் சுற்று கொரோனா வைரஸினை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் – ரணில் முன்னெச்சரிக்கை

எந்த நாட்டினாலும் கொரோனா இரண்டாவது சுற்று பரவலை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இரண்டாம் சுற்று கொரோனா வைரஸினை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சோதனை செய்வதற்கான திறனை அதிகரிக்கவேண்டும்,பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தவேண்டும்.

இந்தியா, சீனா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் ஏற்கனவே இரண்டாம் சுற்று பரவலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதன் காரணமாக பல பகுதிகள் மீண்டும் முடக்கல் நிலைக்கு செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட சர்வதேச அமைப்புகள் வழங்கிய நிதியை சுகாதார துறையினர் உட்பட கொவிட்19க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!