பறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா? – ராஜிதவிடம் கேள்வி எழுப்புகிறார் விக்கி

தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை அவர்களுக்கு மீண்டும் வழங்குமாறு வலியுறுத்துவது இனவாதமா என்று அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனவாதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக ஊடகங்கள் வழியாக பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் தமது உரிமைகளுக்காக அழுத்தம் கொடுக்கும் பலத்தை இழந்துள்ளனர். எனினும் பின்னர் அவர்கள் தமது உரிமைகளுக்காக அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்தனர். தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெற்கில் இப்படியான விமர்சனங்களுக்கு கருத்துக்களும் முன்வைக்கப்படும்.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோருவது என்பது நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. எனினும் அனை சிங்கள மக்களுக்கு எதிரான முயற்சி என எண்ணுகின்றனர். தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் அவர்களிடம் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக பேசுவது எப்படி இனவாதமாகும் என கேள்வி எழுப்புவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!