தெலுங்கானாவில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்: கண்ணீர்மல்க வெளியிட்ட வீடியோ!

தெலுங்கானாவில் கொரோனா பாதித்து குணமடைந்த மருத்துவரை நிர்வாகம் தனி அறையில் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதரபாத்தின் நலகுந்தா பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுல்தானா என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டவர் கடந்த 1ம் திகதி தும்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, ரூ. 1.9 லட்சம் கட்டணமாக செலுத்தியுள்ளார். தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்ய அவர் தயாரானார்.

அப்போது, நாள் ஒன்றுக்கு கட்டணமாக ஒரு லட்சம் கட்டணம் செலுத்த வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனை கட்ட சுல்தானா மறுத்ததால், தனி அறையில் போட்டு அடைத்து வைத்ததுடன் பணத்தை கட்டினால் மட்டுமே வெளியேவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக, வாட்ஸப்பில் கண்ணீர் மல்க டாக்டர். சுல்தானா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சந்தர்காட் பொலிசார் அதிகாரிகளும், சுல்தானா பணிபுரிந்த மருத்துவமனையிலன் மருத்துவர்கள் விரைந்து சென்று சுல்தானாவை மீட்டனர். இதுகுறித்து தும்பே மருத்துவமனையின் மருத்துவர் அப்துல்லா சலீம், கொரோனா சிகிச்சைக்கு உரிய முறையில் ஒத்துழைக்காத காரணத்தினால் சுல்தானாவை தனி அறையில் வைத்து பூட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னரே பொலிசுக்கு தகவல் அளித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!