சசிகலா விடுதலையானால் அதிமுக-வில் இருக்கும் பலரை அசைத்து பார்ப்பார்: முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பது குறித்த கேள்வி அதிமுக அமைச்சர்கள் இரண்டு பேர் வெவ்வேறு விளக்கம் கொடுத்திருப்பது சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அடுத்த மாதம் விடுதலையாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், தமிழ அரசியலில் இது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிமுக-வில் இருக்கும் பலரின் உண்மை முகங்கள் சசிகலாவுக்கு தெரியும். இதனால் அவர்களை எல்லாம் நிச்சயம் சசிகலா அசைத்து பார்ப்பார்.

அதுமட்டுமின்றி சசிகலா சிறையில் இருந்த படி வரவிருக்கும் தேரதலுக்கு வியூகம் அமைத்து வருவதாகவும், தினகரன் அவருக்கு தேவையான தகவல்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாகவும் செய்தி வெளியாகின. இந்நிலையில், இன்று நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்நிலை பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரண மாவட்ட செயலாளர் என்று கூறினார். இதுவே அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, ஓ.எஸ்.மணியன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து எனத் அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை.

சசிகலா விவகாரத்தில் ஏற்கெனவே அதிமுக என்ன முடிவு எடுத்ததோ அதுதான் நாளையும் தொடரும். ஒரு குடும்பத்தை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம் என்று கூறியுள்ளார். சசிகலாவின் விடுதலை அதிமுகவை அசைக்குமா என்ற பார்வை இருந்து வரும் நிலையில் அதிமுக அமைச்சரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!