நேற்று மட்டும் 300 பேருக்கு தொற்று உறுதி! – எகிறியது கொரோனா

இலங்கையில் நேற்று ஒரே நாளில் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொருவர் வெலிகட சிறைச்சாலை கைதி ஒருவர் எனவும் ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!