வடக்கில் 28 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 28 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, ட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 339 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் நேற்று சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த ஒருவருடன் இவர்கள் பழகியதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைக்கைதிகளுடன் பழகிய நபர் என்பதால், விடுதலை செய்யப்பட்டவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும், அவருடன் பழகிய 14 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!