அதிகாரத்துக்கு வர முன்னமே எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது – ரணில்

மின்சாரக் கட்டணத்திற்கு எமது அரசாங்கத்தில் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்போம் என்று அண்மையில் நான் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே தான் அதிகாரத்திற்கு வரமுன்னதாகவே வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுத்தருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையின் எரிபொருள் விலைக்கு அமைவாகவே மின்சாரக்கட்டணம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் எரிபொருள் விலை உலக சந்தையில் 50 சதவீதம் வரையில் குறைவடைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!