பொய்த் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை!

போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் இவ்வாறான போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!