கைதிகளை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல தற்காலிக தடை?

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாது அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை காணொளி தொழிநுட்பம் மூலம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சில வழக்கு விசாரணைகளின் திகதிகளை நீடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர சிறைச்சாலைகளுக்கு இடையில் கைதிகளை பரிமாற்றம் செய்யும் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வெலிகடை சிறைச்சாலையின் மெகசீன் விளக்கமறியல் சிறையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!