சாத்தான்குள கொலை வழக்கில் தமிழக முதல்வரை விசாரிக்கக் கோரும் மனு நாளை விசாரணை!

சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சாத்தான்குளத்தில் பொலிஸார் தாக்கியதில் வியாபாரிகளான தந்தை, மகன் மரணமடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் தொடர்புடைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருவதுடன் அதில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீது கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்து விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றது.

முதலில் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை மற்றும் மகன் இருவரும் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்கள் என்று கூறிருந்தார். எனவே இதுதொடர்பாக அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!