உடம்பிலும், உதட்டிலும் காயம்… 7 வயது சிறுமி படுகொலை சம்பவத்தில் தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு பாலத்தின் அடியில் வீசப்பட்ட சம்பவத்தில், அந்த சிறுமியின் தாயார் பல அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த வடலிவிளை இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் தண்ணீர் பிடிக்கும் வெற்று டிரம்மில் 8 வயது சிறுமி உடலில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது கடந்த 16-ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின், பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்த சிறுமி, கல்விளை இந்திராநகரைச் சேர்ந்த சேகர் – உச்சிமாகாளி தம்பதியின் மகள் என்றும், அவர் 3-ஆம் வகுப்ப் படித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக உச்சிமாகாளி, கணவரை பிரிந்து கூலி வேலை செய்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, வழக்கமாக உச்சிமாகாளி கூலி வேலைக்குச் சென்றுவிட்ட, காலை 10.30 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிரேதபரிசோதனை அறிக்கையில், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, குழந்தை கழுத்து நெரித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இந்திராநகரைச் சேர்ந்த முத்து ஈஸ்வரன் (20), நந்தீஸ்வரன் (20) ஆகியோரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் தாயார், தன்னுடைய மகளின் உடலில் கடித்து வைத்தது போன்ற ரத்த காயம் இருந்தது, டிரம்முக்குள் எடுக்கும் போது நாங்கள் பார்த்தோம் என்று கூறியுள்ளார். உயிரிழந்த சிறுமி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அருகில் இருக்கும் முத்து ஈஸ்வரன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.

இது முத்து ஈஸ்வரனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் படி சம்பவ தினத்தன்று டிவி பார்ப்பதற்கு அங்கு சென்ற போது, சிறுமியை வெளியில் அனுப்பி முத்து ஈஸ்வரன் வீட்டை பூட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டின் மீது கல் எறித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடும் கோபமடைந்த முத்து ஈஸ்வரன், சிறுமியை கழுத்தை நெரித்துள்ளார். அதன் பின், சிறுமியை டிரம்மில் போட்டு, பாலத்திற்கு அடியில் போட்டு வந்துள்ளார். இதற்கு அவரின் நண்பர் நித்தீஸ்வரர் உதவியுள்ளார். முத்து ஈஸ்வரன் குழந்தையின் கழுத்தை நெரித்தவுடன் மயங்கி விழுந்துள்ளார். அவர் உயிரிழக்கவில்லை, மயங்கிய சிறுமியை தான், அங்கிருந்து சுமார் 2 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் ஓடை பாலத்தில் போட்டுள்ளனர்.

சுமார் 42 நிமிடங்கள் சிறுமி, டிரம்மிற்குள்ளே உயிருக்கு போராடி, துடி துடித்து பரிதாபமாக இறந்துள்ளார். சிறுமியின் உடல் மற்றும் உதட்டில் கடித்து வைத்தற்கான காயம் இருந்ததுள்ளது. தலையில் ரத்த காயம் இருந்ததாகவும், அந்த சிறுமியின் தாயார் கூறியுள்ளார். மேலும், சிறுமியை வீட்டுக்குள்ளே வைத்து வன்கொடுமை செய்து, அதன் பின்பு தான் டிரம் உள்ளே போட்டுள்ளனர். இவன் தான் என் குழந்தையை கொன்றவன், ஏற்கனவே இவன் கஞ்சா விற்றுகிட்டு இருந்தவன், போதையில் தான் இந்த அக்கிரமத்தை அவன் செய்திருக்கிறான் என்று தாய் கதறி அழுகிறார்.

பிரேதபரிசோதனை முடிவு வெளிவந்தாலும், தாயார் கூறும் தகவல்களால் சிறுமியின் மரணம் மர்மமாகவே உள்ளது. மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக 4 லட்சத்து 12 ரூபாய்க்கான காசோலையும், அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு பட்டாவும் அப்பகுதி மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. மொத்த 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!