நாம் அரசியல் செய்கிறோமா?; மக்களிடம் கேளுங்கள் – இப்படியும் சொல்கிறது இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா என்பதை பொது மக்களிடம் கேட்டுப் பார்த்தால் விளங்கும். அரசியல்வாதிகள் போலிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்” இப்படிச் சொல்கிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய.

ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

“நேற்று முன்தினம் இராணுவ தளபதி யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்தார். இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இராணுவத்தினர் ஆகிய எமக்கு பொது மக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு, வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதோடு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வருகின்றோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!