வயதுக்கு வராத கட்சி – சைக்கிளைக் கிண்டலடித்த விக்கி!

கூட்டமைப்பு அடங்கலாக அரசுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் நீக்கினால் இரண்டே இரண்டு கட்சிகள் தான் மிஞ்சும். அவற்றில் ஒன்று எங்களுடையது. மற்றையது வயது வராத, முதிர்ச்சி பெறாத, வாதம் ஒன்றே வாழ்க்கை என்று வாதாடும் சைக்கிள் கட்சி என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அளவெட்டியில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” தம்பி பிரபாகரன் அன்று உருவாக்கிய கூட்டமைப்பு என்பது போய் இன்று அது கூட்டணியாக மாறியுள்ளதை ஏற்று வருகின்ற 5 ஆம் திகதி எமக்கு நீங்கள் வாக்கிடுவீர்கள் என நம்புகிறோம். வாக்கிடுவது எப்படியென்றும் கூறி விடுகிறேன். இந்தமுறை வாக்குச்சீட்டு மிக நீளமானது. 33 கட்சிகள் போட்டியிடுகின்றன. அதில் 14 சுயேச்சைகள், அவை ஏதோ சில அரசியல் சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு.

ஆகவே அதைத் தவிர்த்து மேலும் அரசுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் தவிர்த்தீர்களேயானால் மிஞ்சியிருப்பது மீனும், சைக்கிளும் தான். ஆனால் அந்தக் கட்சி வயது வராத கட்சி. அதற்கு காலம் இருக்கிறது. ஆகவே, அதைத் தவிர்த்து மீன் சின்னத்துக்கு வாக்கிடுங்கள்.” என்று அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!