சிறுவர்களை ஆடு, மாடு போல் பூட்டி வைக்க முடியாது – வடக்கு ஆளுநர்

தடுப்பு காவல் என்று சிறுவர்களை பூட்டி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் சிறுவயதில் குடும்ப சூழ்நிலை, அகச்சூழல், புறச்சூழல், உடலில் ஏற்படும் மாற்றங்களால் தவறைப் புரிகின்றார்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஒரேயொரு சான்றுபெற்ற நன்னடத்தை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு காவல் இல்லத்தை, இன்று (23) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“அவர்கள் தங்களுக்கு தெரியாமலே இந்த தவறைப் புரிகின்றார்கள். எனவே அவர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கான ஆலோசனைகள், கல்வி என்பன புகட்டப்பட வேண்டும்.

மாறாக அவர்களை ஆடு, மாடுகள் போல் இங்குள்ள சிறைகளில் பூட்டி வைப்பது என்பது, அவர்களை நாளை மிகவும் தீவிரமான செயற்படும், மற்றும் குற்றச்செயல்களை மீண்டும் செய்யத்தூண்டும் அளவுக்கு மாற்றிவிடும்.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!