சம்பந்தன் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதியோம்!

துப்பாக்கி ரவைகளால் நாட்டைப் பிளவுபடுத்த முயன்ற பிரபாகரனைப் போல, வாக்குச் சீட்டுகளால் நாட்டைப் பிளவுபடுத்த சம்பந்தனுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட வாரச் சந்தைப் பகுதியில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

“இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவே வெற்றி பெறும். வடக்கு, கிழக்கு தொடர்பாக எந்த அரசியல் கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகளையும் நாங்கள் கவனத்தில் கொள்ளமாட்டோம்.

எனவே, தேர்தலுக்குப் பின்னர் நாட்டை பிளவுபடுத்துவதற்கான சாத்தியங்கள் எதுவும் கிடையாது. இது குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை.

வடக்கு, கிழக்கு மக்கள் தேர்தல்களில் சுதந்திரமாக தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் எப்போதும் இருக்கிறோம். ஆனாலும், எந்தவொரு கட்சியும் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!