84 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில்!

பொதுத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 84 ஆயிரம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!