இறுதிப் போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் – உறுதிப்படுத்துகிறார் சஜின்!

பொதுமக்களுக்கு இழப்பின்றி இறுதிக்கட்டப் போர் நடத்தப்பட்டது என்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித வாஸ் குணவர்த்தன கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு இணையாக பொதுமக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரணகம விசாரணைக் குழுவின் அறிக்கையில், 22 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பது குறித்து மூன்று பிரிவுகளாக கூறப்பட்டுள்ளதை காண முடியும். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள், புலிகளால் பிடிக்கப்பட்டு காணாமல்போனவர்கள், யார் பிடித்தார்கள் என்று தெரியாமல் காணாமல் போனவர்கள் என மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

போருக்குப் பின்னர் எங்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால், நாங்கள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் போராடினோம். இறுதியில், ஆபிரிக்க நாடுகளும் சீனாவும் மட்டுமே எங்களுடன் இருந்தன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!