அதிகாலையிலேயே வாக்களிக்க செல்லுங்கள் – மகேசன் தெரிவிப்பு!

வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவத்துள்ளார். மேலும்,

“இன்று காலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியை பேணி முக கவசம் அணிந்து வாக்களிக்கமுடியும்.

யாழில் 30 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். அவர்களுக்குரிய வாக்களிக்கின்ற சந்தர்ப்பமும் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 26 வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறையை பின்பற்றுவதற்காக மேலதிகமாக சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

வாக்காளர்கள் எந்த பயமுமின்றி தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்த முடியும். அதற்குரிய சுகாதார நடைமுறைகள் சம்பந்தமான விடயங்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!