சூடான இடங்களில் விசேட அதிரடிப்படை!

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று நடைபெறும் நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப் படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறைகள் இடம்பெறும் எதிர்பார்க்காத போதிலும் பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையே பயன்படுத்தப் போவதாகவும் படையினரை பயன்படுத்தப் போவதில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த தேர்தல்களின் போது இருந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, குருநாகல், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, நவலப்பிட்டி, புத்தளம் போன்ற பகுதிகளில் முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!