நான்காவது முறையாக பிரதமரானார் மகிந்த!

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற, பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ச நேற்று மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

களனி ரஜமஹா விஹாரையில், நேற்று காலை 9.20 மணியளவில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மதவழிபாடுகளை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வில், பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இரண்டு முறை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில், புதிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை கண்டிய அரண்மனையில் உள்ள முகுல் மடுவ என்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர் செயலகம் இன்று அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!