அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரனைகளை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (19) கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எனினும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

அதன் காரணமாகவே இன்றைய தினம் அவரால் மன்றில் முன்னிலையாக முடியவில்லை எனவும் அதனால் பிரிதொரு தினத்தை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னர் அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபா நிதியை செலவில் கொழும்பு கின்சி வீதியில் வீடு ஒன்றை கொள்வனவு செய்தமையின் ஊடாக நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தாக சட்டமா அதிபரால் கடந்த நல்லாட்சி காலத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது 30 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை இந்த மாதம் 26 ஆம் திகதி முன்னெடுப்பதாக கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது வழக்கின் சாட்சியாக பெயரிடப்பட்டுள்ள கணனியின் தடயவியல் அறிக்கையை கிடைத்துள்ளமையும் தெரியவந்தது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!