போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய எஸ்ரிஎவ் அதிகாரி கைது!

மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரியான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவுடன் இணைந்து போதைப்பொருளைக் கடத்தி விற்பனை செய்து ஆயுதங்களை சேகரித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணை தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 49 வயதான குறித்த சந்தேகநபர் புவக்பிட்டிய வெஹேரகொல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!