யாழில் தடைப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“யாழ். மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களில் 2 பிரதான திட்டங்கள் அரசினாலும் மேலும் ஒரு திட்டம் உலக வங்கியின் நிதியினாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனைவிட பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

கொரோனா தொற்று மற்றும் நிலைமாறுகால பகுதியில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படாமை போன்ற காரணத்தால் திட்டங்களை சீராக நடாத்துவதில் சிறு தடங்கல் ஏற்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் மிகுதி நான்குமாத காலப்பகுதிக்குள் இந்த திட்டத்தினை முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மிகத் துரிதமாக அமுல்படுத்தி மிகுதி வேலைகளை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்குரியவாறு மீளாய்வுக் கூட்டங்களை நடாத்தி அதனை இயலுமானவரை நிறைவு செய்வதற்குரிய பணிகளை முன்னெடுத்துள்ளோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!