நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல்: வெடிகுண்டை தயாரித்த மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் வெடிகுண்டுகள் நிறைந்த காரை பாதுகாப்புப் படையின் அணி வகுப்பு மீது மோதியதில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் ஒரு ஜெய்ஷ் பயங்கரவாத பயிற்சி நிலையத்தை தாக்கியது. 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் முக்கிய சதிகாரர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத சூத்திரதாரி மசூத் அசார் மற்றும் அவரது சகோதரர் ரவூப் அஸ்கர் ஆகியோர் இருந்தனர் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்க்ப்பட்டு உள்ளது.

13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 19 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது மற்றும் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றைத் திட்டமிட்டு நிறைவேற்றியது எவ்வாறு என் அகூறப்பட்டு உள்ளது.

மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. த்ச்சிய புலனாய்வு சுட்டிக்காட்டிய பயங்கரவாதிகளில் 6 பேர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஐந்து பேர் காணவில்லை, அவர்களில் மூன்று பேர் பாகிஸ்தானியர்கள் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மீது மோதிய தற்கொலை குண்டுதாரி ஆதில் அகமது தார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் போன்ற பிற வெடிபொருட்கள் ஈ-காமர்ஸ் தளம் மூலம் வாங்கப்பட்டன. குற்றபத்திரிகையில் உமர் பாரூக்கின் தொலைபேசியில் காணப்படும் ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட வெடிபொருட்களின் புகைப்படங்களுடன் அழைப்பு பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் அரட்டைகள் உள்ளன. முதல் முறையாக, புல்வாமாவில் பயன்படுத்தப்பட்ட குண்டை மூன்று பயங்கரவாதிகள் தயாரித்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!