மோசமான நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. அவருக்கு நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டு உள்ளது.

வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிறிது பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் நேற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!