சொல்ஹெய்மின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ரம்புக்வெல்ல!

இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர் என்று, எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ள குற்றச்சாட்டை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

போரின் போது, இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர் என்று, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் , குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, போரின்போது, பயங்கரவாதிகள் மீதே இராணுவம் தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொமக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ள இந்தக் கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!