இடைக்கால கணக்கு அறிக்கையில் 1000 ரூபாய் சம்பள உயர்வு விடயம் இடம்பெறாதது ஏன்? – அநுர கேள்வி!

இடைக்கால கணக்கறிக்கையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்த யோசனை ஏன் உள்வாங்கப்படவில்லை என்று அநுரகுமார திஸாநாயக்க எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு நிச்சயமாக மார்ச் மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி இன்று (28) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். மேலும்,

“உறுதியளிக்கப்பட்டவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஆயிரம் ரூபா வேதனம் வழக்கப்படுமா என கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி நிதியமைச்சரிடம் கேள்வி ஒன்றை நான் தொடுத்திருந்தேன்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அந்த ஆயிரம் ரூபா வழங்கப்படும் என நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதா என மீண்டும் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலளித்த அப்போதை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டார். அப்போது பதிலளிப்பதற்கு இடம் வழங்காது எழுந்து நின்ற நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தானே இந்த விடயத்தை கூறுவதாகவும் நிச்சயமாக மார்ச் மாதம் இந்த கொடுப்பணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று (27) சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கையில் எங்கே அந்த கொடுப்பணவு உள்ளடக்கப்பட்டுள்ளது” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!