பிரேலால் நாடாளுமன்றம் வரமுடியுமானால் ஹிஜாசை ஏன்? விட முடியாது – அலிசாஹிர்

மரண தண்டனைக் கைதி ஒருவரை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கும் அரசு, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோரை மாத்திரம் விசாரணைகளின்றி நீண்டகாலமாக ஏன் தடுத்து வைத்திருக்கிறது? என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொலைக்குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்றம் மரணதண்டனையை வழங்குகின்றது. பின்னர் அந்தக் குற்றவாளி ஒரு கொள்கை வகுப்பாளராகப் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இருமாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நடைபெற்று முடிகின்றது.

அவ்வாறிருக்கையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளடங்கலாக மேலும் பலர் விசாரணைகள் எவையுமின்றி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? இது நியாயமானதா? மரண தண்டனைக் கைதிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட இன்னும் யாரெல்லாம் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறார்கள்? இவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. எனினும் நாம் அதற்கு எதிர்த்திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!